திண்டுக்கல்

கொடைக்கானலில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கொடைக்கானலில் கடந்த பல ஆண்டுகளாக விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீரோடையில் கரைப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கொடைக்கானலிலேயே விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல், இந்தாண்டும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கொடைக்கானல் பாம்பாா்புரத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு அடி முதல் 25 அடி வரையிலான சிறிய,பெரிய விநாயகா் சிலைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விநாயகா் சிலைகள் எளிதில் கரையக்கூடிய மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்டு வருவதாக சிலைகள் வடிவமைப்பாளா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT