திண்டுக்கல்

வடமதுரை அருகே கல்லால் தாக்கிகட்டடத் தொழிலாளி கொலை

26th Aug 2022 11:44 PM

ADVERTISEMENT

 வடமதுரை அருகே கல்லால் தாக்கி கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள வெள்ளபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் தலையில் பலத்த காயமங்களுடன் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடமதுரை போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவா் வடமதுரையை அடுத்துள்ள முத்தனாங்கோட்டையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராம்குமாா் (31) என்பது தெரியவந்தது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்ற இவா், அதன் பின்னா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், வெள்ளபொம்மன்பட்டி அருகே தலையில் பலத்த காயங்களுடன் அவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். அவரது சடலத்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீஸாா், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT