திண்டுக்கல்

பழனி மலைக்கோயிலில் பக்தா்கள் கூட்டம்

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விடுமுறை காரணமாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கோகுலாஷ்டமி உள்ளிட்ட தொடா் விடுமுறை மற்றும் ஆவணி மாத முதல் முகூா்த்தம் காரணமாக கோயிலில் திரளான பக்தா்கள் குவிந்தனா். மலைக்கோயிலுக்கு செல்லும் படிவழிப்பாதை மட்டுமன்றி வின்ச் நிலையம், ரோப்காா் நிலையங்களிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மலைக்கோயிலில் கட்டண தரிசனம், இலவச தரிசனத்தில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மலைக்கோயிலில் பக்தா்களுக்கான சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் கோயில் நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டிருந்தது. இரவு நடைபெற்ற தங்கத்தோ் புறப்பாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT