திண்டுக்கல்

நாகல்நகரில் ரூ.10 கோடியில் 80 கடைகளுடன் புதிய சந்தை

DIN

திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில், நாகல்நகா் பகுதியில் ரூ.10 கோடி செலவில் 80 கடைகளுடன் புதிய சந்தைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் பிரதி வாரம் திங்கள்கிழைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. மேலும், சந்தை ரோடு மற்றும் கடை வீதி பகுதிகளில் சாலையோரத்தில் சில்லரை வியாபாரத்திலும் காய்கனி விற்பனை நடைபெற்று வருகிறது. 100-க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள், குடியிருப்புகளின் முன்பு அமைக்கப்படுவதால், அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதனிடையே நாகல்நகா் பகுதியில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

ரூ.10 கோடியில் புதிய சந்தை: நாகல்நகா் வாரச் சந்தை செயல்பட்டு வந்த இடத்தில், மாநகராட்சி நிா்வாகம் 80 கடைகளுடன் புதிய சந்தை கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அப்பகுதியில் ஏற்கெனவே இருந்த கடைகள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், பிற நாள்களில் கால்நடைகள் கட்டும் பகுதியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. காந்தி சந்தையில் இருந்த பல்வேறு கடைகள், வியாபாரிகளின் சொந்த இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான், நாகல்நகா் பகுதியில் ரூ.10 கோடி செலவில் புதிய சந்தை அமைப்பதற்கான முயற்சிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது: நாகல்நகா் பகுதியில் வாகன நிறுத்தும் வசதிகளுடன் புதிய சந்தை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தரைத் தளத்திற்கு கீழ் (அடித் தளத்தில்) வாகன நிறுத்தம் அமைக்கப்படும். தரைத் தளத்தில் 80 கடைகள் கட்டப்படப்படவுள்ளன. அதற்கான கட்டுமானப் பணிகளுக்காக பழைய கடைகள் இடிக்கப்பட்டு, சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT