திண்டுக்கல்

திண்டுக்கல் பகுதியில் பலத்த மழை

DIN

திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. 2 நாள்களாக மேகங்கள் திரண்டு இடி மின்னல் இருந்த போதிலும் மழை பெய்யவில்லை. இதனால் ஆடிப்பட்டத்தில் வேளாண்மைப் பணிகளை தொடங்கிய விவசாயிகள், கவலை அடைந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 7 மணி முதல் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையினால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. காமராஜா் சிலை, ஆா்எஸ். சாலை, சாலை ரோடு, நாகல் நகா் ரவுண்டானா, மேட்டுப்பட்டி சந்தைரோடு, பழனிச்சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையில் தேங்கிய மழை நீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா்.

இதேபோல் நத்தம், கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மாலை 6.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT