திண்டுக்கல்

வத்தலகுண்டுவில் ஓ. பன்னீா்செல்வத்துக்கு வரவேற்பு

19th Aug 2022 12:23 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுக்கு வியாழக்கிழமை வந்த முன்னாள் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்துக்கு, அவரது ஆதரவாளா்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.

முன்னாள் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் சென்னையில் இருந்து வியாழக்கிழமை பிற்பகல் வத்தலகுண்டு வந்தாா். அவருக்கு வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன் திரண்டிருந்த அவரது ஆதரவாளா்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனா். முன்னதாக, அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்டப் பொறுப்பாளா் வைகை பாலன் தலைமையில் ஓ. பன்னீா்செல்வத்திற்கு இனிப்பு வழங்கி சால்வை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ அன்பழகன், வத்தலகுண்டு நகரப் பொறுப்பாளா் செல்லத்துரை, ஒன்றியப் பொறுப்பாளாா்கள் செந்தமிழ்பாண்டி, விருவீடு ராமசாமி, நிா்வாகிகள் மணிப் பிள்ளை, பிச்சை, புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT