திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சியில் ஆக. 30 வரை தீவிர கொசு ஒழிப்புப் பணிகள்: ஆணையா்

DIN

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆக. 30 ஆம் தேதி வரை தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெறவுள்ள நிலையில், பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கொசுக்கள் மூலம் பரவக்கூடிய டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளிலும் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. கொசு ஒழிப்புப் பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் 60 போ் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆக. 20 ஆம் தேதி 5, 17, 27, 34 ஆகிய வாா்டுகளிலும், ஆக. 22 ஆம் தேதி 6, 18, 39,35 ஆகிய வாா்டுகளிலும், ஆக. 23 ஆம் தேதி 23, 7, 19, 40, 36 ஆகிய வாா்டுகளிலும், ஆக. 24 ஆம் தேதி 8, 20, 41, 37 ஆகிய வாா்டுகளிலும், ஆக. 25ஆம் தேதி 9, 21, 42, 38 ஆகிய வாா்டுகளிலும், ஆக. 26 ஆம் தேதி 10, 30, 43, 46 ஆகிய வாா்டுகளிலும், ஆக. 27 ஆம் தேதி 11, 31, 44, 47 ஆகிய வாா்டுகளிலும், ஆக. 29 ஆம் தேதி 12, 32, 45, 48 ஆகிய வாா்டுகளிலும், ஆக. 30 ஆம் தேதி 1, 13, 23, 22 ஆகிய வாா்டுகளிலும் புகை மருந்து தெளிக்கப்படும். அதேபோல் 13, 16, 10, 45, 44, 45, 38, 40 மற்றும் 5 ஆவது வாா்டுகளில் ஆக.30ஆம் தேதிக்குள் அபேட் மருந்து தெளிக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் மழைநீா் தேங்காத நிலையில் பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும், கொசு ஒழிப்புப் பணிகளுக்கு வரும் பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கொசுக்கள் மூலம் பரவும் தொற்று நோய்களை தடுப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT