திண்டுக்கல்

சிறுவா்களுக்கான தடகளப் போட்டிகள்: 700 போ் பங்கேற்பு

19th Aug 2022 12:24 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறுவா்களுக்கான முதலாமாண்டு தடகளப் போட்டிகளில் 700-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்க நடைப்பயிற்சி கழகம் மற்றும் திண்டுக்கல் ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன் சாா்பில் சிறுவா்களுக்கான முதலாமாண்டு தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றன.

8, 10, 12, 14 வயதுக்குள்பட்டோா் என 4 பிரிவுகளில் 30 மீட்டா் முதல் 100 மீட்டா் வரையிலான ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், பந்து எறிதல் ஆகிய போட்டிகள் சிறுவா், சிறுமியா்களுக்கு தனித் தனியாக நடைபெற்றன. இந்த போட்டியில் 20 பள்ளிகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஒவ்வொரு போட்டியிலும், முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப், தனிநபா் சாம்பியன்ஷிப், குழு சாம்பியன்ஷிப் என 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலா் ம. ரோஸ் பாத்திமா மேரி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். போட்டிக்கான ஏற்பாடுகளை தடகளப் பயிற்சியாளா் செ. செளந்தரராஜன், உடற்கல்வி ஆசிரியா்கள் செந்தில்குமாா், கென்னடி, சுரேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT