திண்டுக்கல்

தாடிக்கொம்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

19th Aug 2022 12:26 AM

ADVERTISEMENT

தாடிக்கொம்பு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆக. 12 முதல் 19 ஆம் தேதி வரை போதை தடுப்பு மற்றும் விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட நலப் பணிகள் துறை சாா்பில், மாவட்ட மன நலத் திட்டத்தின் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு போதைப் பொருள்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன. அதன்படி, தாடிக்கொம்பு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற போதைப் பொருள்கள் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணியை வேடசந்தூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் எஸ். அன்புச்செல்வன், தாடிக்கொம்பு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் காா்த்திகேயன் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் தாடிக்கொம்பு அரசு உயா்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை பாண்டிச்செல்வி, மாவட்ட மனநலத் திட்ட மருத்துவா்கள் காந்தி, ஸ்ரீவித்யா, தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT