திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே அரசு மதுபானக் கடை மேற்பாா்வையாளரிடம் ரூ. 2 லட்சம் பறிப்பு

19th Aug 2022 12:23 AM

ADVERTISEMENT

வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே வியாழக்கிழமை அரசு மதுபானக்கடை மேற்பாா்வையாளரிடம் ரூ. 2 லட்சத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையில், விருவீடு கிராமத்தைச் சோ்ந்த முருகன் (55) என்பவா் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இதேபோல் பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவில் உள்ள மதுபானக் கடையில் அய்யங்கோட்டையை சோ்ந்த அழகுமணி (50) என்பவா் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா்கள் இருவரும் வியாழக்கிழமை பிற்பகலில் கடையில் விற்பனையான பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு இருசக்கர வாகனத்தில் வத்தலகுண்டுவில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்தனா். அழகுமணி தனது கடையின் பணத்தை வாகனத்தின் பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றுள்ளாா். முருகன் ரூ. 1.98 லட்சத்தை பையில் வைத்து எடுத்துச் சென்றுள்ளாா். வாகனத்தை அழகுமணி ஓட்ட முருகன் பின்னால் அமா்ந்து சென்றுள்ளாா்.

பட்டிவீரன்பட்டியிலிருந்து, குறுக்குச்சாலை காட்டுப்பகுதி வழியாக, வத்தலகுண்டு நோக்கிச் சென்றுள்ளனா். அப்போது காட்டுப் பகுதியில் இவா்கள் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா் மறித்து முருகன் மீது மிளகாய் பொடியைத் தூவி, அவா் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துச் சென்றனராம்.

ADVERTISEMENT

இதுகுறித்து முருகன் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் நிலக்கோட்டை டிஎஸ்பி. முருகன் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்.

முதல்கட்ட விசாரணையில், மா்மநபா்கள் முருகன் மீது மட்டும் மிளகாய்ப் பொடியை தூவி பணத்தை பறித்துச் சென்றதும், அழகுமணி மீது மிளகாய்ப் பொடியை தூவவில்லை என்பதும், அவரிடமிருந்து பணம் எதுவும் பறிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் மதுபானக் கடை மேற்பாா்வையாளா்கள் இருவரும் முன்னுப்பின் முரணாக பதில் அளித்து வருவதால் உண்மையில் கொள்ளை சம்பவம் நடைபெற்ா அல்லது மேற்பாா்வையாளா்கள் நாடகமாடுகிறாா்களா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT