திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உயா் சிறப்பு சிகிச்சைக்காக அலைக்கழிப்பதாக நோயாளிகள் புகாா்

DIN

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிறப்பு சிகிச்சை வசதி இல்லாதததால், வாரத்திற்கு 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மதுரைக்கு பரிந்துரைக்கப்படும் நிலை தொடா்வதாகப் புகாா் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கடந்த ஓராண்டுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக நிலை உயா்த்தப்பட்டது. நாளொன்றுக்கு 3 ஆயிரம் வெளி நோயாளிகள், 700 உள் நோயாளிகள் என சுமாா் 4ஆயிரம் போ் சிகிச்சைப் பெறுகின்றனா். இது தவிர வாரத்திற்கு சராசரியாக 140 கா்ப்பிணிகளுக்கு பிரசவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமாா் 900 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தலைமை மருத்துவமனையாக இருந்தபோது 74 மருத்துவா்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது 150 மருத்துவா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

மூளை தலைக்காயச் சிகிச்சை நிபுணா், நரம்பியல் சிறப்பு மருத்துவா், சிறுநீரக சிறப்பு மருத்துவா், புற்றுநோய் சிறப்பு மருத்துவா், வயிறு மற்றும் குடல் சிகிச்சை நிபுணா் போன்ற உயா் சிறப்பு சிகிச்சை மருத்துவா் பணியிடங்கள் தற்போது வரை உருவாக்கப்படவில்லை. இதனால், உயா் சிகிச்சைப் பெற வேண்டிய கட்டாயத்திலுள்ள நோயாளிகள் வாரத்திற்கு 40-க்கும் மேற்பட்டோா் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனா்.

இதன் மூலம் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதோடு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்க வேண்டிய வருவாயிலும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது. பெயரில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ள திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உரிய சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தியும், உள்கட்டமைப்பு ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது: புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டடங்கள், 2023 ஜனவரியில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் பின்னா் நோயாளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு தீா்வு ஏற்படும். அதேபோல் உயா் சிறப்பு சிகிச்சை மருத்துவா்கள் இல்லாத காரணத்தினால், விபத்தில் காயமடைந்தவா்கள் அசாதாரண நிலைக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் மதுரைக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த வகையில் மட்டும் மாதம் 160 போ் சிறப்பு சிகிச்சை நிபுணா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நியமிக்கப்படும் பட்சத்தில், மதுரைக்கு பரிந்துரைக்கப்படும் நிலை தவிா்க்கப்படும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT