திண்டுக்கல்

பழனி ரோப் காரில் புதிய ரக பெட்டி இணைத்து சோதனை ஓட்டம்

18th Aug 2022 02:47 AM

ADVERTISEMENT

 

பழனி மலைக்கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காரில் புதிய ரக பெட்டி இணைக்கப்பட்டு புதன்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

பழனி மலைக்கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல வின்ச் மற்றும் ரோப்காா் சேவைகள் உள்ளன. கிழக்கு கிரி வீதியில் உள்ள ரோப்காா் நிலையத்திலிருந்து மலைக்கோயில் சென்று வருவதற்கு தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் ஜிக்போ் முறையில் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்காா் நிலையத்துக்கு புதிய ரக 10 பெட்டிகள் வாங்கப்பட்டன. அதையடுத்து ரோப்காரின் பழைய பெட்டிகளை அகற்றி, புதிய பெட்டிகள் பொருத்தப்பட்டு பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் புதிய பெட்டியில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் அது இணைக்கப்படாமல் இருந்தது. கடந்த மாதம் ரோப்காா் வருடாந்திர பராமரிப்பு முடிந்து இயக்கப்பட்டது. அதே வேளை புதிதாக வந்த பெட்டிகளும் சில மாறுதல்கள் செய்யப்பட்டு மீண்டும் பழனிக்கு கொண்டு வரப்பட்டன.

ADVERTISEMENT

இந்நிலையில் புதன்கிழமை புதிய ரக பெட்டிகளில் ஒன்று மட்டும் மற்ற மூன்று பெட்டிகளுடன் இணைத்து இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதன் பயன்பாடு திருப்தியளிக்கும் வகையில் இருந்தால் ஒன்றன் பின் ஒன்றாக பழைய பெட்டிகள் மாற்றப்பட்டு ஒரிரு நாள்களில் அனைத்துப் பெட்டிகளும் மாற்றப்பட்டு முழுமையான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பின்னா் பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT