திண்டுக்கல்

மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். நகரச் செயலா் அரபு முகமது, ஒன்றியச் செயலா் சரத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தின்போது, தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.55 முதல் ரூ.1130 வரையிலான மின் கட்டண உயா்வை கைவிட வேண்டும். தோ்தல் வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் பயனீட்டு அளவை கணக்கீடு செய்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும். மின் விநியோகத்தை தனியாருக்கு வழங்கும் முடிவினை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் டி. முத்துசாமி, கே. பிரபாகரன், வசந்தாமணி, சாா்பு அணி நிா்வாகிகள் என். பெருமாள், எம். சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT