திண்டுக்கல்

ஆயக்குடி பேரூராட்சியைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் குடிநீா் இணைப்பு பெறுவதற்கு இடைத்தரகா்கள் தலையீடு உள்ளதைக் கண்டித்து அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. தற்போது வீடுகளுக்கு புதிய குடிநீா் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பங்கள் பெறலாம் என்று ஆயக்குடி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாக இடைத்தரகா்கள் தொல்லையால் பொதுமக்களிடம் கூடுதல் தொகை கேட்பதாகவும் அரசு நிா்ணயித்த கட்டணமாக விண்ணப்பப் படிவத்திற்கு ரூ. 100-ம், இணைப்புக் கட்டணத்திற்கு ரூ. 10 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இடைத்தரகா்கள் தலையீடு காரணமாக சுமாா் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கேட்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ஆயக்குடி பேரூா் செயலாளா் சசிக்குமாா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினா் பேரூராட்சி அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே பேரூராட்சி நிா்வாகம் நேரடியாக வசூலிக்க வேண்டும். இடைத்தரகா்கள் தலையீட்டை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வேணுகோபாலு, குப்புசாமி, நகரச் செயலாளா் முருகானந்தம், ஒன்றியச் செயலாளா்கள் முத்துசாமி, மாரியப்பன், பேரூா் செயலாளா்கள் விஜயசேகா், பாலசமுத்திரம் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT