திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 50 போ் கைது

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினா் 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈ.வெ.ரா.பெரியாா் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக சினிமா சண்டைப் பயிற்சியாளா் கனல் கண்ணன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி அமைப்பின் கிழக்கு மாவட்டச் செயலா் சஞ்சீவிராஜ் தலைமை வகித்தாா். மதுரை கோட்டச் செயலா் எஸ். சங்கா் கணேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினா் 15-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல், அபிராமி அம்மன் கோயில் தோ் நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவா் வினோத்ராஜ் தலைமை வகித்தாா். தடையை மீறி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 30-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

இந்து முன்னணியினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT