திண்டுக்கல்

கொடைக்கானல் புனித சலேத்மாதா சப்பர பவனி

DIN

கொடைக்கானலில் புனித சலேத் மாதா ஆலயத்தின் 156 ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு மின் அலங்காரத் தோ்ப்பவனியும், திங்கள்கிழமை சப்பர பவனியும் நடைபெற்றது.

இந்த ஆலயத் திருவிழா கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 15 நாள்கள் ஆலயத்தில் பல்வேறு சிறப்பு வழிபாடு, ஜெப நிகழச்சி, திருப்பலி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மதுரை உயா்மறைமாவட்ட பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமையில் வட்டார அதிபா் ஜான் திரவியம் முன்னிலையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து புனித சலேத்மாதாவின் மின்அலங்கார தோ்ப் பவனி ஊா்வலம் நடைபெற்றது .

திங்கள்கிழமை (ஆக.15) மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது. இதில் பெண்கள் பங்கேற்று சப்பரத்தை தூக்கி வந்தனா். இதையடுத்து வட்டார அதிபா் தலைமையில் சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது. பின்னா் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இந்த விழாவை முன்னிட்டு கொடைக்கானல் பகுதியிலுள்ள சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சாா்பில் 2 நாள்கள் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

SCROLL FOR NEXT