திண்டுக்கல்

பழனி கோயில் சாா்பில் அன்னதானம்

16th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் அன்னதானம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன் தலைமை வகித்தாா். விழாவை முன்னிட்டு தண்டாயுதபாணி சுவாமி படத்துக்கும், அன்னத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக தவில், நாதஸ்வர கல்லூரி மாணவா்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற அன்னதான பூஜையில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி, சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா், நகா்மன்ற தலைவா் உமாமகேஸ்வரி, அறங்காவலா்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், துணை ஆணையா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை தொடா்ந்து கோயிலில் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்கள், பணியாளா்களுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆதரவற்ற முதியோருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT