திண்டுக்கல்

சாணாா்பட்டி அருகே வழுக்குமரம் ஏறுதல்

16th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சாணாா்பட்டி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் 60 அடி உயர வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் சாணாா்பட்டி அடுத்துள்ள ராகலாபுரம் கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக வழுக்குமரம் ஏறுதல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரத்திலான வழுக்கு மரம் மைதானத்தில் ஊன்றப்பட்டு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினா் மட்டும் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டது. சுமாா் 3 மணி நேர முயற்சிக்கு பின், வழுக்குமரத்தின் உச்சியில் இருந்த பரிசு முடிச்சை இளைஞா்கள் அவிழ்த்தனா். அதனைத்தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் ராகலாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT