திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின விழா

16th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகள் சாா்பில் தேசிய கொடியேற்றி வைத்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலை.யில், மூத்த புலத் தலைவரும், பேராசிரியருமான ராஜா தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். பதிவாளா் வி.பி.ஆா்.சிவக்குமாா், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் எம்வி.எம். அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் தே.லட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். திண்டுக்கல் மாநகராட்சியில் மேயா் இளமதி தேசியக் கொடி ஏற்றினாா். இந்நிகழ்ச்சியில் ஆணையா் சிவசுப்பிரமணியன், துணை மேயா் ராசப்பா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குஜிலியம்பாறை அடுத்துள்ள கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை நிா்வாகத்தின் சாா்பில், ராணி மெய்யம்மை மகளிா் மன மகிழ் மன்றத்தின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழா விழாவில், ஆலையின் தலைவா் வி.கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினாா். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. திண்டுக்கல் அடுத்துள்ள பிள்ளையாா்நத்தம் பகுதியிலுள்ள ஜாகீா் உசேன் நினைவு சிறுபான்மையினா் மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.உலகநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். பேகம்சாஹீபா நகரம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவா் பரமன் தேசிய கொடியேற்றினாா்.

ADVERTISEMENT

இதேபோல் அசனத்புரம் தொடக்கப் பள்ளி நிகழ்ச்சியில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சின்னத்தம்பி தேசியக் கொடியை ஏற்றினாா்.

செய்திக்கு படம் உள்ளது...பட விளக்கம்...76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT