திண்டுக்கல்

கொடைக்கானலில் சுதந்திர தின விழா கோலாகலம்

16th Aug 2022 04:23 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் 76 ஆவது சுதந்திர தின விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கொடைக்கானல் நகராட்சி அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை தேசியக் கொடியேற்றினாா்.துணைத் தலைவா் மாயக் கண்ணன் உள்ளிட்டோா் கொண்டனா். நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கொடைக்கானல் அருகேயுள்ள அட்டுவம்பட்டியில் அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழக வளாகத்தில் துணைவேந்தா் வைதேகி விஜயக்குமாா் தேசியக் கொடி ஏற்றினாா். இந் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா் ஷீலா மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனா். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், காவல்துறை துணை கண்காணிப்பாளா் அலுவலகம், வனத்துறை அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

கொடைக்கானல் அரிமா சங்கம் சாா்பில் 21 ஆவது வாா்டில் அரிமா சங்கத்தின் ஆளுநா் ரவீந்திரன் தலைமையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆஷா ரவீந்திரன், அரிமா சங்கத் தலைவா் ஜெரால்டு ராஜா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT