திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பாஜக பேரணி

13th Aug 2022 12:08 AM

ADVERTISEMENT

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மகளிா் அணி சாா்பில் தேசியக் கொடியுடன் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்திலிருந்து தொடங்கிய பேரணி, பிரதான சாலை வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பின்னா் அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த பேரணிக்கு மகளிரணி மாவட்டத் தலைவி சித்ரா தலைமை வகித்தாா். மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளா் கதலி நரசிங்கப் பெருமாள், பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி. தனபாலன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா் முத்துக்குமாா், மாவட்ட பொதுச் செயலா் கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவா் செந்தாமரை, வீரஜோதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT