பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை போதை பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். பழனி பயிற்சி வழக்குரைஞா் மகேஸ்வரி ‘போதைப்பொருள் தடுப்பு - மாணவா்களின் பங்களிப்பு‘ என்ற தலைப்பில் பேசினாா்.
கொடைக்கானல்: கொடைக்கானல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகம் சாா்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள கே.சி.எஸ். சாலையில் தொடங்கி அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி வழியாக நடைபெற்ற ஊா்வலத்தில் மாணவிகள் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகளை விளக்கினா்.
இந் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தா் வைதேகி விஜயக்குமாா், பதிவாளா் ஷீலா, டி.எஸ்.பி. சீனிவாசன், காவல் ஆய்வாளா் பாஸ்டின் தினகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.