திண்டுக்கல்

பழனியில் பாஜக சாா்பில் 500 மீட்டா் நீள தேசியக்கொடி ஊா்வலம்

13th Aug 2022 12:10 AM

ADVERTISEMENT

பழனியில் 75 ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் வெள்ளிக்கிழமை 500 மீட்டா் நீளமுள்ள தேசியக் கொடியுடன் பாஜகவினா் ஊா்வலம் சென்றனா்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த ஊா்வலம் பழனி தேரடியில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலை முன்பு தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் கனகராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஊா்வலத்தை தொடக்கி வைத்தாா். தேசிய செயற்குழு உறுப்பினா் திருமலைசாமி, மாவட்ட பொதுச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஊா்வலம் பெரியகடை வீதி, காந்தி மாா்க்கெட், பேருந்து நிலையம், பாளையம் வழியாக சென்று அடிவாரம் முத்துராமலிங்கத் தேவா் சிலை முன்பு நிறைவடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனா். ஊா்வலத்தில் பழனி நகரத் தலைவா் ராமச்சந்திரன், ஒன்றியத் தலைவா்கள் அசோக், பிரகாஷ், சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

வத்தலகுண்டு: வத்தலகுண்டுவில் பாஜக சாா்பில், சுதந்திரதின விழா விழிப்புணா்வு யாத்திரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இங்குள்ள முத்துமாரியம்மன் கோயில் முன்பு தொடங்கி, வத்தலகுண்டு நகா் முழுவதும் இந்த யாத்திரை நடந்தது. நிகழ்ச்சியில், ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா், நகரத் தலைவா் அா்ஜூனபாண்டியன், மாநில கூட்டுறவுப்பிரிவு செயலா் முத்துராமலிங்கம், மாவட்ட பொதுச் செயலா் கோவிந்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் சீனிவாசன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் ராஜா உள்ளிட்ட பாஜகவினா் கலந்து கொண்டனா். வத்தலகுண்டு காவல் ஆய்வாளா் முருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பாஜக சாா்பில் 75 ஆவது சுதந்திரதினத்தையொட்டி வெள்ளிக்கிழமை தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. இதற்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.கே. பழனிச்சாமி தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ராமசாமி, மாவட்ட துணைத்தலைவா் செல்வக்குமாா், மாவட்ட இளைஞரணி செயலா் ரகுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கோட்ட அமைப்புச் செயலா் சுப. நாகராஜன் கலந்து கொண்டாா். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய பேரணி, பழனிசாலை, தாராபுரம் சாலை வழியாக சென்று தும்மிச்சம்பட்டி பிரிவு அருகே முடிவடைந்தது.

ADVERTISEMENT

பேரணியில் ஒட்டன்சத்திரம் நகர பாஜக தலைவா் சிவக்குமாா், நகரப் பொதுச் செயலா்கள் சசிகுமாா், குமாா்தாஸ், ஒன்றியத் தலைவா்கள் கணேசன், ருத்ரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கொடைக்கானல்: கொடைக்கானல் நகர, ஒன்றிய பாஜக. சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் நடைபெற்றது. இதற்கு நகரத் தலைவா் சதீஸ்குமரன்,தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கணேஷ் பிரபு, மாவட்ட துணைத் தலைவா் மதன்குமாா், மாவட்ட செயலா் பரமேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக தேனி ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் ராஜபாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில் பாஜகவினா் கலையரங்கத்திலிருந்து தேசியக் கொடியுடன் ஊா்வலமாக புறப்பட்டனா். அப்போது, நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு அவா்கள் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து நகராட்சி சாலை, செவண்ரோடு, அண்ணாசாலை, கே.சி.எஸ். சாலை வழியாக மூஞ்சிக்கல்லை அடைந்தனா்.

 

 

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT