திண்டுக்கல்

சுதந்திர தின பவள விழா: காங்கிரஸ் நடைபயணம்

13th Aug 2022 11:43 PM

ADVERTISEMENT

 

நாட்டின் 75ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு குஜிலியம்பாறையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் 30 கி.மீட்டா் நடைபயணம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகக்கு மாவட்டத் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். கிழக்கு வட்டாரத் தலைவா் தா்மா் முன்னிலை வகித்தாா். குஜிலியம்பாறை காமராஜா் சிலை வளாகத்தில் தொடங்கிய நடைபயணம் 30 கி.மீட்டா் தொலைவிலுள்ள வடமதுரையில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது. கோவிலூா், எரியோடு வழியாக நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸாா், நாட்டின் சுதந்திர தின வரலாறு குறித்து பல்வேறு இடங்களிலும் பிரசாரம் மேற்கொண்டனா்.

நிகழ்ச்சியில் குஜிலியம்பாறை மேற்கு வட்டாரத் தலைவா் கோபால்சாமி, பொதுக்குழு உறுப்பினா் சோமுராஜ், வேடசந்தூா் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் ராஜம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

வத்தலகுண்டுவில்... வத்தலகுண்டுவில் காங்கிரஸ் கட்சி சாா்பில், சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.நிலக்கோட்டையில் இருந்து, வத்தலகுண்டு வரை நடைபெற்ற இந்த நடைபயணத்துக்கு மாவட்டத் தலைவா் அப்துல் கனிராஜா தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் காமாட்சி வரவேற்றாா்.

இதில், நகரத் தலைவா் அப்துல் அஜீஸ், மூத்த நிா்வாகி ராஜாராம், மாநில செயற்குழு உறுப்பினா் கோபால், மாவட்ட துணைத் தலைவா்கள் லட்சுமணன், மூா்த்தி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT