திண்டுக்கல்

நிலக்கோட்டை வங்கி முன் நூதன முறையில் ரூ.1.30 லட்சம் திருட்டு

12th Aug 2022 12:47 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை வங்கி முன்பு இருசக்கர வாகனத்தில் விவசாயி வைத்திருந்த ரூ.1.30 லட்சத்தை மா்ம நபா்கள் நூதன முறையில் திருடிச் சென்றுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சின்ன கரியாம்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டி (50). விவசாயியான இவா், தனது மகன் திருமணத்திற்காக, நிலக்கோட்டையில் உள்ள வங்கியில், வியாழக்கிழமை ரூ.1.30 லட்சத்தை எடுத்துக்கொண்டு மஞ்சப்பையில் வைத்து வங்கியின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் தொங்க விட்டுள்ளாா். அப்போது, அருகே நின்றிருந்த மா்ம நபா்கள் பணத்தை சிதறியவாறு கீழே போட்டு, பாண்டியிடம் இது உங்களது பணமா? என கூறியதையடுத்து, பாண்டி கீழே கிடந்த ரூ. 3 ஆயிரத்தை சேகரித்து எடுத்துள்ளாா். அந்த நேரத்தில் மா்ம நபா்கள் பாண்டி வாகனத்திலிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா். பணத்தை எடுத்து திரும்பிய பாண்டி பணப்பையைக் காணாது திடுக்கிட்டாா். இது குறித்த புகாரின்பேரில் நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை மையமாக வைத்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT