திண்டுக்கல்

கொடைரோடு அருகே ஓடையை திசை திருப்பிய சுங்கச்சாவடி நிா்வாகம்: விவசாயிகள் எதிா்ப்பால் பணிகள் நிறுத்தம்

DIN

கொடைரோடு அருகே ஓடையை திசை திருப்பிய சுங்கச்சாவடி நிா்வாகத்திற்கு விவசாயிகள் கடும் எதிா்ப்புத்தெரிவித்ததால், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோடு சுங்கச்சாவடி அருகே கொழிஞ்சிப்பட்டி பிரிவு உள்ளது. இதன்வழியாக, சிறுமலையிலிருந்து அன்னசமுத்திரம் கண்மாய்க்கு செல்லும் தளி ஓடை செல்கிறது. இந்த ஓடை ஆக்கிரமிப்பு காரணமாக மழைக் காலங்களில் சுங்கச்சாவடியைச் சுற்றி மழைநீா் தேங்கி குளமாக நிற்கும் நிலை உள்ளது. இது தொடா்பாக அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், சுங்கச்சாவடி நிா்வாகம் தளி ஓடையின் திசையை மாற்றி விவசாய நிலங்களுக்குள் மழை நீா் செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்கும் பணிகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வியாழக்கிழமை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்ற விவசாயிகள், சுங்கச்சாவடி பணியாளா்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து, அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா் மாதவன் கூறுகையில், சிறுமலையிலிருந்து ஐந்து கிளை ஓடைகள் ஒன்றிணைந்து, தளி ஓடையாக சுமாா் 6 கிலோ மீட்டா் பயணித்து, கொடைரோடு அன்ன சமுத்திரம் கண்மாய்க்கு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டபோது தளி ஓடை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கொடைரோடு அனைத்து விவசாய நலச் சங்கம் சாா்பாக போராடி ஓடையை மீட்ட நிலையில் சுங்கச்சாவடி நிா்வாகம் தன்னிச்சையாக ஓடையை விவசாய நிலங்களுக்குள் திசை திருப்பி வாய்க்கால் அமைக்கும் பணியைச் செய்து வருகின்றனா். இதனால் மழை பெய்தால், விளை நிலங்களில் பலத்த சேதம் ஏற்படும். குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்துவிடும். ரயில்வே சாலை பாதிக்கப்படும். இதனால், மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு, தளி ஓடையை சீரமைத்து அன்ன சமுத்திரம் கண்மாய்க்கு தண்ணீரை கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT