திண்டுக்கல்

பழனியாண்டவா் கல்லூரி, பாலிடெக்னிக்கில் போதைபொருள் தடுப்பு விழிப்புணா்வு

12th Aug 2022 12:40 AM

ADVERTISEMENT

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரிகளில் வியாழக்கிழமை போதை பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் பிரபாகா் முன்னிலை வகித்து மாணவா்களிடையே போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து உரையாற்றினாா். தொடா்ந்து தமிழ்த்துறைத்தலைவா் முனைவா் கிருஷ்ணமூா்த்தி பேசினாா். பின்னா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த 350-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட தொண்டா்கள் மற்றும் தேசிய மாணவா்படை வீரா்கள் பங்கேற்றனா்.

பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வா் கந்தசாமி தலைமையில் மாணவ, மாணவியா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மேலாளா் ரவீந்திரன் என நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT