திண்டுக்கல்

பள்ளிகளில் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு

12th Aug 2022 12:44 AM

ADVERTISEMENT

நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நத்தம் வட்டாட்சியா் சுகந்தி தலைமை வகித்தாா். நத்தம் பேரூராட்சித் தலைவா் எம்.எஸ்.கே.பாட்ஷா, நத்தம் காவல் ஆய்வாளா் தங்க முனியசாமி, தலைமையாசிரியா் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா். முன்னதாக, போதைப் பழக்கத்தினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்து காவல் துறையினா் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT