பெங்களூரில் இருந்து ரயில் மூலம் மது பாட்டில்களை கடத்தி வந்த முதியவரை ரயில்வே காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி- மைசூா் விரைவு ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வருவதாக கொடைரோடு ரயில் நிலைய சிறப்பு தனிப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாா்பு-ஆய்வாளா் மகேஸ்வரன் தலைமையிலான போலீஸாா், புதன்கிழமை கொடைரோடு வந்த அந்த ரயிலில் சோதனையிட்டனா்.
அப்போது, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சோ்ந்த கந்தசாமி (65) என்பவா் 25 கா்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்து, கந்தசாமியை கைது செய்தனா்.