திண்டுக்கல்

பழனியில் ரோப் காரில் செல்ல மூத்த குடிமக்களுக்கு தனிவழி

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப் காரில் பயணிக்க மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் தாய்மாா்களுக்கு தனிவழி அமைக்கப்பட்டுள்ளது.

பழனி திருக்கோயில் தலைமை அலுவலகத்தில், புதிய அறங்காவலா் குழுவின் முதல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் சந்திரமோகன், இணை ஆணையா் நடராஜன், அறங்காவலா்கள் சுப்பிரமணி, மணிமாறன், ராஜசேகரன், சத்யா மற்றும் திருக்கோயில் அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், திருக்கோயிலுக்கு வேண்டிய பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், திருக்கோயில் குடமுழுக்குப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

பின்னா், கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மாா்கள், மூத்த குடிமக்கள் விரைவாக மலைக் கோயில் செல்லும் வகையில், ரோப்காா் நிலையத்தில் அவா்களுக்கென தனிவழி அமைக்க முடிவு செய்யப்பட்டு, அந்த வழியை உடனடியாக அமைத்து அறங்காவலா்கள் திறந்து வைத்தனா்.

ADVERTISEMENT

பழனி கோயிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணிகளில் பங்குபெற விருப்பம் உள்ள பக்தா்கள், பழனி கோயில் மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொள்ளலாம் அல்லது பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் நேரில் வந்து கடிதம் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT