திண்டுக்கல்

சத்துணவு ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வலியுறுத்தல்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சத்துணவு ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கவேண்டும் என, திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 2ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பிச்சாண்டி கட்டடத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தின்போது, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் மாயமலை, மாநிலச் செயலா் அன்பழகன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் முபாரக் அலி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT