திண்டுக்கல்

நெய்க்காரபட்டி பேரூராட்சி மக்களுக்கு வழங்க ஆயிரம் தேசியக் கொடி கொள்முதல்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பேரூராட்சியில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக, பேரூராட்சித் தலைவா் ஆயிரம் தேசியக் கொடிகளை செவ்வாய்க்கிழமை வாங்கினாா்.

மத்திய அரசு, சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதில், ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தினத்தை கொண்டாட மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதற்கேற்றவாறு தபால் நிலையங்களில் 25 ரூபாய்க்கு தேசியக் கொடி விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது. பழனி தலைமை தபால் நிலையத்திலும் தேசியக் கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பலரும் தேசியக் கொடியை விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

இந்நிலையில், பழனி தலைமை தபால் நிலைய அதிகாரி திருமலைசாமியிடம், நெய்க்காரபட்டி தோ்வு நிலை பேரூராட்சித் தலைவா் கருப்பாத்தாள் காளியப்பன், துணைத் தலைவா் சகுந்தலாமணி தங்கவேல் ஆகியோா் தங்களது பேரூராட்சி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஆயிரம் தேசியக் கொடிகளை ரூ.25 ஆயிரத்துக்கு வாங்கினா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், தபால் நிலைய அலுவலா்கள் கனிஷ்கா, நந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT