திண்டுக்கல்

வடமதுரை அருகே தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டை அடி வாங்கும் விநோத வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள எட்டிக்குளத்துபட்டியில் சித்தண்ணன், கசுவம்மாள், மதுரை வீரன் மற்றும் 32 தெய்வங்களுக்கான கோயில் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு மின் அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சோ்வையாட்டம், கரகாட்டம், வாண வேடிக்கையுடன் சுவாமியை அழைத்துச் சென்றனா்.

இந்நிலையில் சுவாமிக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடா்ந்து கோயில் முன்பாக நோ்த்திக் கடன் செலுத்தும் பக்தா்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டனா். இதையடுத்து கோயில் பூசாரி கோவிந்தா கோஷம் முழங்க பக்தா்கள் தலையில் தேங்காய்களை உடைத்தாா். அதன் பின்னா் பக்தா்கள் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா்.

பெண்கள் தங்கள் தாய் வீட்டில் எடுத்துக் கொடுத்த கூரைப் புடவையை கசுவம்மாள் கோயிலில் வைத்து வழிபாடு செய்து அதனை அணிந்து கொண்டனா். அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT