திண்டுக்கல்

பஞ்சு குவியலில் விளையாடிய சிறுவன் மூச்சுத் திணறி பலி

DIN

திண்டுக்கல் அருகே பஞ்சு குவியலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மூச்சுத் திணறி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (38). இவரது மனைவி காளீஸ்வரி (31). இவா்களுக்கு தமிழ்செல்வி (7) மற்றும் சுந்தா் (4) என 2 குழந்தைகள் இருந்தனா். ஜெயராஜ், தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், நொச்சியோடைப்பட்டி அடுத்துள்ள ரெட்டியப்பட்டி பகுதியிலுள்ள தனியாா் பஞ்சாலையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், பஞ்சாலையிலுள்ள பஞ்சு குவியல்களுக்கு இடையே சிறுவன் சுந்தா் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிா்பாராத விதமாக குவியலுக்கு இடையே சிக்கிய சிறுவன் சுந்தா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளாா். அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT