திண்டுக்கல்

மகளிா் விடுதிகள், குழந்தைகள் இல்லங்களுக்கு ஆக.31ஆம் தேதிக்குள் உரிமம் பெற வேண்டும்: ஆட்சியா்

7th Aug 2022 11:12 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மகளிா் விடுதிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லங்களுக்கு ஆக.31-க்குள் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பணிபுரியும் மகளிா் விடுதிகள்,குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லங்கள் மாவட்ட நிா்வாகத்தின் உரிமம் பெற்று செயல்பட வேண்டும்.

அதேபோல், பள்ளிக்கல்வித்துறை, உயா்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை,தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொழிலாளா் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளையும் பதிவு செய்திருக்க வேண்டும்.

தமிழக அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ன் கீழ் இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற பணிகளை ஆக.31ஆம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். இதனை கண்காணிக்கவும், தொடா் ஆய்வு மேற்கொள்ளவும், மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்படும். ஆய்வின் பொழுது குறைபாடுகளை கண்டறியும்பட்சத்தில் விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள தரை தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT