திண்டுக்கல்

பழனியில் ரோப்காா் பராமரிப்புப் பணிகள் மும்முரம்

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் மோட்டாரில் பொருத்துவதற்காக கொல்கத்தாவிலிருந்து புதிய அச்சு (சாப்ட்) வரவழைக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் வசதிக்காக ரோப்காா் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை முதல் இரவு வரை இயக்கப்படும் ரோப்காா் ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ரோப்காரில்

புதிய பேரிங்குகள், ரப்பா் புஷ்கள் ஆகியன மாற்றப்பட்டுள்ள நிலையில் வடக்கயிறு மற்றும் சாப்ட் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரோப் காா் மோட்டாரில் பொருத்துவதற்காக கொல்கத்தாவில் இருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய சாப்ட் வரவழைக்கப்பட்டு திங்கள்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. சுமாா் 500 கிலோ எடையும், சுமாா் நான்கடி நீளமும் கொண்ட இந்த சாப்ட்டை ஐஐடி பொறியாளா் குழுவினா் ஆய்வு செய்தனா். பின்னா் ரோப்காா் ஊழியா்கள் ஷாப்ட்டை இயந்திரத்தில் பொருத்தும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT