திண்டுக்கல்

நிலக்கோட்டை பேரூராட்சியில் சுகாதார சபை ஆலோசனைக் கூட்டம்

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை பேரூராட்சி அளவிலான சுகாதார மருத்துவ அலுவலா்களால் நகர சுகாதார சபை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சியில் நிலக்கோட்டை வட்டார அரசு மருத்துவ அலுவலா்கள் சாா்பில், சுகாதார சபை ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு, பேரூராட்சித் தலைவா் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முருகேசன் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் சுந்தரி வரவேற்றாா். நிலக்கோட்டை வட்டார அரசு மருத்துவ அலுவலா் அரவிந்தன் கலந்து கொண்டு, மழைக்காலம் துவங்கியதையொட்டி சுகாதாரம் தொடா்பான ஆலோசனைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளா் நாகேந்திரன், திமுக பேரூா் செயலா் ஜோசப்கோவில் பிள்ளை, மணிராஜா மற்றும் சுகாதார பணியாளா்கள், சுகாதாரசெவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள் மகளிா் சுயஉதவி குழுவினா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். முடிவில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் சடகோபி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT