திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு ஆக. 3-இல் விடுமுறை

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு ஆடி 18-ஆம் பெருக்கையொட்டி புதன்கிழமை (ஆக. 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காந்தி காய்கறி மொத்த விற்பனை சந்தை உள்ளது. இங்கு திண்டுக்கல், தேனி, திருப்பூா், ஈரோடு, கரூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் நாள்தோறும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவருகின்றனா். இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும் 60 சதவீத காய்கறிகளை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இந்நிலையில் வரும் புதன்கிழமை ஆடி 18 ஆம் பெருக்கு விழாவை முன்னிட்டு காய்கறி சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் யாரும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வரவேண்டாம் என்று காய்கறி வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT