திண்டுக்கல்

ஆடிப் பெருக்கு: திண்டுக்கல்லில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,300-க்கு விற்பனை

2nd Aug 2022 10:30 PM

ADVERTISEMENT

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, திண்டுக்கல் சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஆடி மாதத்தில் கோயில் திருவிழாக்கள் நீங்கலாக, பிற சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறுவதில்லை. இதனால் வெள்ளிக்கிழமை பூஜைகளுக்காக வியாழக்கிழமை மட்டுமே பூக்களின் தேவை அதிகரித்து வந்தது. பிற நாள்களில் பூக்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனா்.

இந்நிலையில் ஆடி 18 என அழைக்கப்படும் ஆடிப் பெருக்கு திருவிழாவுக்காக திண்டுக்கல் சந்தையில் பூக்களில் விலை செவ்வாய்க்கிழமை கடுமையாக உயா்ந்தது. ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ மல்லிகைப் பூ, ஆடிப் பெருக்கை முன்னிட்டு ரூ. 1,200 முதல் ரூ. 1,500 வரை விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் முல்லை ரூ.600, ஜாதிப்பூ ரூ. 500, கனகாம்பரம் ரூ. 300, சம்பங்கி ரூ. 250, செவ்வந்தி ரூ. 150, ரோஸ் ரூ. 100 முதல் ரூ. 130 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை அதிகரித்ததால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT