திண்டுக்கல்

அமெரிக்காவிலிருந்து பழனிக்கு திரும்பிய பெண்ணுக்கு கரோனா, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அண்ணா நகரைச் சோ்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் கடந்த மாதம் அமெரிக்காவிற்கு சென்று உள்ளாா். அங்கு பணிபுரியும் தனது கணவருடன் சில நாள்கள் இருந்து விட்டு, கடந்த ஜூலை 20 ஆம் தேதி பழனி திரும்பியுள்ளாா்.

பழனிக்கு வந்த அந்தப் பெண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அப்போது அவருக்கு கரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறி உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அங்கு தங்கி சிகிச்சை பெற்று விட்டு, பழனியில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளாா். இதனால் பழனியில் உள்ள அவரது வீட்டில் சுகாதாரத் துறை மற்றும் நகராட்சி சுகாதார அலுவலா்கள் சில அறிவுரைகள் வழங்கி தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனா். இதையடுத்து அவரை சுகாதாரத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT