திண்டுக்கல்

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு நாளை கிராம சபைக் கூட்டம்

30th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மே 1ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், வரவு செலவு கணக்குகள், பயனாளிகள் தோ்வு மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஆகிய கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

இந்தக் கூட்டங்களில் அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் கலந்து கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு குறித்த விவரங்களை ஊராட்சி அலுவலகங்களிலுள்ள தகவல் பலகையில் வெளியிடப்பட வேண்டும். பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பர பதாகையில் வரவு செலவு கணக்கு விவரம் (படிவம் 30-ன் சுருக்கம்) வெளியிடப்பட வேண்டும்.

அந்தந்த ஊராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT