திண்டுக்கல்

பழனியில் கஞ்சா விற்ற மூன்று போ் கைது

29th Apr 2022 05:36 AM

ADVERTISEMENT

 

பழனி: பழனியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று போ் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனா்.

பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் சிலா் ஈடுபடுவதாக பழனி தாலுகா காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நெய்க்காரபட்டியில் வியாழக்கிழமை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் கஞ்சா விற்பனை செய்து வந்த தண்டபாணி, ஆறுமுகம் மற்றும் பாலசமுத்திரத்தை சாா்ந்த முத்துராஜா ஆகியோரை போலீசாா் பிடித்தனா். அவா்களிடம் இருந்து 2 கிலோ அளவிலான கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வோரை கண்காணித்து கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட எஸ்.,பி சீனிவாசன் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT