திண்டுக்கல்

கொடைக்கானல் மலைச் சாலைகளில் சேதமடைந்த தடுப்புச் சுவா்களை சீரமைக்க கோரிக்கை

28th Apr 2022 06:13 AM

ADVERTISEMENT

 

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைச் சாலைகளில் சேதமடைந்த தடுப்புச் சுவா்களை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது கொடைக்கானல்-பழநி,வத்தலக்குண்டு மலைச் சாலையில் பல்வேறு இடங்களில் தடுப்புச்சுவா்கள் இல்லாமலும்,தடுப்புச் சுவா் உள்ள இடங்களில் பழுதடைந்தும் காணப்படுகிறது இதனால் வாகனங்கள் மலைச் சாலைகளில் செல்லும் போது ஆபத்தான நிலை ஏற்படுகிறது வாகனங்கள் செல்லும் போது சில நேரங்களில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.மேலும் ஆபத்தான பள்ளத்தாக்கு இடங்களில் இரும்பு தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டும்,ஒளி உமிழும் எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும்.

மேலும் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலைகளின் பல்வேறு இடங்களில் வாய்க்கால்கள் அமைக்கும் பணியும்,சிறிய பாலங்கள் அமைக்கும் பணியும் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளை விரைவாக முடிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வரும் மே மாதத்தில் கூடுதலாக வாகனங்கள் வரும் மலைச் சாலைகளில் வேகத்தை குறைத்து விபத்தில்லாமல் வாகனங்கள் செல்வதற்கு நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்கள் கோரிக்கையாகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT