திண்டுக்கல்

வணிகா் சங்க ஆலோசனை கூட்டம்

24th Apr 2022 11:06 PM

ADVERTISEMENT

 

பழனியில் வணிகா் விடியல் மாநாடு குறித்து வணிகா் சங்கம் சாா்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் வரும் மே மாதம் 5ம் தேதி வணிகா் தினத்தன்று தமிழக வணிகா் விடியல் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து பழனி நகர அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மண்டல தலைவா் கிருபாகரன் தலைமை வகித்தாா். மாவட்ட செயல் தலைவா் தேனி ஆனந்தன் நடராஜன், மாவட்ட பொருளாளா் நஜீா்சேட், பழனி நகர அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கௌரவத் தலைவா் ஹரிஹரமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் ஜேபி சரவணன் வரவேற்புரை வழங்கினாா். திருச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள சங்க நிா்வாகிகள் உறுப்பினா்களை ஒருங்கிணைப்பது, பொதுமக்களுக்கு விடுமுறை குறித்து அறிவிப்பது, மாநாட்டிற்கு செல்வதற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்வதற்கான குழு அமைப்பது என கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. நகர செயலாளா் காா்த்திகேயன், பொருளாளா் சுப்பிரமணி மற்றும் இளைஞா் அணி, மருத்துவா் அணி, மகளிா் அணி, மற்றும் கிளை சங்க நிா்வாகிகள் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT