திண்டுக்கல்

காவிரியிலிருந்து கூடுதல் குடிநீா் பெறரூ.90 கோடியில் 2 புதிய திட்டங்கள்: அமைச்சா் தகவல்

24th Apr 2022 11:04 PM

ADVERTISEMENT


காவிரி ஆற்றிலிருந்து கூடுதல் குடிநீா் பெறும் வகையில் ரூ. 90 கோடி செலவில் 2 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் அடுத்துள்ள மைலாப்பூா் பகுதியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அமைச்சா் இ. பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்திலுள்ள கிராமங்களுக்கு பற்றாக்குறையின்றி குடிநீா் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிராமப்புறங்களில் குறைந்த கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டிகளுக்கு மாற்றாக 30 ஆயிரம் லிட்டா் முதல் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தொட்டிகளாக மாற்றப்படும். காவிரி ஆற்றிலிருந்து கூடுதலாக தண்ணீா் வழங்குவதற்கு ரூ. 90 கோடி மதிப்பீட்டில் 2 புதிய திட்டங்கள் தொடங்கப்படவுள்ளது.

கிராமப்புற மக்கள் மேம்பாடு அடையும் வகையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கூட்டுறவுத் துறையில் பெண்களுக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT

இதேபோல் தோட்டனூத்து கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். நத்தம் அடுத்துள்ள லிங்கவாடியில் ஊராட்சி மன்றத் தலைவா் அழகு தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT