திண்டுக்கல்

தாடிக்கொம்பு சொா்ண ஆகா்ஷணபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

23rd Apr 2022 10:42 PM

ADVERTISEMENT

 

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தாடிக்கொம்பு சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஒவ்வாரு தேய்பிறை அஷ்டமியின்போதும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இங்குள்ள சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு, பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட பால், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் 6 கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து, சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

இதேபோல், திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில், அபிராமி அம்மன் கோயில், நத்தம் கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் அமைந்துள்ள காலபைரவா் சந்நிதியிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராரளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT