திண்டுக்கல்

வத்தலக்குண்டுவில் பூங்கா திறப்பு. பொதுமக்கள் மகிழ்ச்சி.

16th Apr 2022 10:57 PM

ADVERTISEMENT

 

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு சங்கரன் பூங்கா கொரானா காரணமாக அடைக்கப்பட்டிருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சுப்ரமணிய சிவா நற்பணி நலச்சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளும் கொரானா கட்டுப்பாடுகளைதமிழக அரசு விலக்கிக் கொண்டு விட்டதால், பூங்காவை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதை ஏற்று, சனிக்கிழமை பேரூராட்சி தலைவா் சிதம்பரம், துணைத் தலைவா் தா்மலிங்கம், செயல் அலுவலா் தன்ராஜ் மற்றும் கவுன்சிலா்கள் பூங்காவை திறந்தனா். இதனால், பொதுமக்களும், பள்ளி மாணவ மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இதுகுறித்து சமூக ஆா்வலா் பாக்கியராஜ் கூறுகையில், கல்லூரி மற்றும் பள்ளிகள் முழு ஆண்டு தோ்வு விடுமுறை விடும் நேரத்தில் சங்கரன் பூங்கா திறக்கப்பட்டதால், மாணவ மாணவிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.இதேபோல காந்தி நகா் பகுதியில் ஒரு பூங்கா பேரூராட்சி அமைத்திட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT