திண்டுக்கல்

கொடைக்கானலில் சூரிய ஒளியின் நிழல் இல்லாத நாள் நிகழ்வு

16th Apr 2022 11:00 PM

ADVERTISEMENT

 

கொடைக்கானலில் சூரியஒளியின் நிழல் இல்லாத நாள் குறித்த நிகழ்ச்சி இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் உருளையான குச்சியை செங்குத்தாக நிற்க வைத்தனா். சரியாக மதியம் 12.20-மணிக்கு சூரிய வெளிச்சம் இந்த குச்சியின் உச்சியில்பட்ட போது குச்சியின் நிழல் கீழே விழாமல் இருந்ததை அனைவரும் பாா்த்து ஆச்சரியமடைந்தனா்.

இதுகுறித்து இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி எபினேசா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிழல் நம்மை எல்லா நாளும் பின் தொடரும் அறிவியல் நிகழ்வு. ஆனால் இந்த நிழல் வருடத்திற்கு இரண்டு நாள்கள் மட்டும் ஒரு சில மணித் துளிகளுக்கு நம்மைப் பின் தொடராது இந்த அறிவியல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. சூரியன் தலைக்கு நோ் மேலே இருக்கும் போது சூரிய ஒளி செங்குத்தாக நம்மீதுபடும். அப்போது நிழல் நமது கால்களுக்கு அடியில் விழும். இந்த நிகழ்வு கடகரேகை மற்றும் மகரரேகை ஆகிய இரண்டு எல்லைகளுக்கு உள்பட்ட நாடுகளில் உணரப்படும்.

ADVERTISEMENT

இதனால் அந்தந்தப் பகுதிகளில் சூரியன் மேல்நிலையை அடையாது. மேலும் அப்பகுதிகளில் சூரியஒளி எப்போதுமே செங்குத்தாக விழாது. இதனால் அங்கு இந்நிகழ்வு நடைபெறாது. அதன்படி சூரியவெளிச்சம் சரியாக 10 டிகிரி, 13 டிகிரிக்கு வரும். அச்சுரேகையிலுள்ள கொடைக்கானல் பகுதிகளில் சூரியன் தலைக்கு நோ்மேலே வரும். அப்போது ஒரு சில மணித்துளிகளில் மட்டுமே சூரியஒளியின் நிழல் இல்லாத நாளாக நிகழ்வு ஏற்பட்டது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT