ஒட்டன்சத்திரத்தில் நலிவடைந்த 160 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு புதிய ஆட்டோக்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலரும், உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை வகித்து ரூ. 3 கோடியே 84 லட்சம் மதிப்பில் 160 பேருக்கு புதிய ஆட்டோக்களை வழங்கி பேசினாா்.இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ப. வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத்தலைவா் ப.வெள்ளைச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் கா. பொன்ராஜ், ஒன்றியத் தலைவா்கள் சத்தியபுவனா ராஜேந்திரன், மு. அய்யம்மாள், திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலா் சி. ராஜாமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.