திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 18 செ.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 18.3 செ.மீட்டா் மழை அளவு பதிவாகியுள்ளது. அதன்படி நத்தத்தில் அதிகபட்சமாக 37.5 மி.மீட்டா் மழை பதிவானது.
பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்):திண்டுக்கல் 9.4, கொடைக்கானல் 22, பழனி 14, சத்திரப்பட்டி 6, நிலக்கோட்டை 25.4, வேடசந்தூா் 14.4, காமாட்சிபுரம் 8.2, கொடைக்கானல் படகு குழாம் 32. மாவட்டம் முழுவதும் 183.3 மில்லி மீட்டா் மழை பதிவானது. இதனிடையே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் 4 ஆவது நாளாக சாரல் மழை பெய்தது.